பழனிச்சாமி. 
உள்ளூர் செய்திகள்

சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி

சுயேட்சை வேட்பாளர் பழனிச்சாமி, தி.மு.க.சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டனர்.

மாலை மலர்

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க.6, அ.தி.மு.க.4, காங்கிரஸ்2, சுயேட்சை3 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் சுயேட்சை வேட்பாளர் பழனிச்சாமி, தி.மு.க.சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டனர். இதில் பழனிச்சாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேலுச்சாமி 6 வாக்குகள் பெற்றார். ஒரு ஓட்டு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.