திருப்பூர்:
திருப்பூர் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமாரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியிரு–ப்பதாவது:-
மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில், தற்போது உணவு வகைகள் தரம் குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், உரிய வகையில் பராமரிக்கப்படாமலும் உள்ளது. பணியாற்றும் ஊழியர்களுக்கு சில மாதமாக சம்பளம் வழங்கவில்லை. உணவு தயாரிக்க வழங்கப்படும் பொருட்கள் பொருட்கள் அளவு குறைவாக வழங்கப்படுகிறது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, அம்மா உணவகம் முறையாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.