திருப்பூர்:
திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார். அங்கு ரோட்டில் வலம் வந்த போதை ஆசாமி ஒருவர் பெண்ணிடம் அத்துமீற முயற்சி செய்தார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த நபரை பிடித்து அடி வெளுத்து எடுத்தார். இதே போல் மற்றொரு பெண்ணையும் அந்த ஆசாமி கையைப் பிடித்து இழுத்து அத்திமீறி நடந்துள்ளார்.
இதனைப்பார்த்த பொதுமக்களும் 'தர்மஅடி' கொடுத்தனர். அப்போது அந்த ஆசாமி பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, தகவலறிந்து சென்ற வடக்கு போலீசாரிடம், நக்கலாக பேசியபடி அந்த நபர் அமர்ந்திருந்தார்.
'கூலிங் கிளாஸ்' போட்டு கொண்டு, 'நான் பாட்ஷா ரஜினி தெரியுமா' என, தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டார். அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் போதையின் இருப்பதும் லேசான மனநிலை பாதிக்கப்ப ட்டிருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.