கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் அடங்கிய 60 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல்  நடைபெற்று வருகிறது. 

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் பட்டுவாடா செய்தல், கட்சியினருக்கு பிரசார செலவுகளுக்கு, பூத் கமிட்டி செலவு என்ற வகையில் ஏராளமான தொகை வழங்குதல் என அரசியல் கட்சியினர் தங்கள் செல்வாக்கை இந்த செலவு மூலம் காட்டுவது வழக்கம். 

அவ்வகையில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கும் கணக்கில் வராத செலவினங்கள் கண்காணித்தல், தேர்தலின் போது வெளியூர் நபர்கள் நடமாட்டம், வன்முறையைத் தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணித்தல் போன்ற பணிகள் அவசியமானது.

திருப்பூர் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  

பறக்கும் படை அதிகாரிகள் விவரம் வருமாறு:-

முதல் மண்டலம்:1. கோவிந்தசாமி, துணை தாசில்தார், 99434 522112.பழனிசாமி ஏ.பி.டி.ஓ., 94872 83925.3. சிவகுமார், துணை பி.டி.ஓ., 95666 79279.2வது மண்டலம்:1. பாண்டீஸ்வரி, துணை தாசில்தார். 82481 41936.2. இந்திராணி, ஏ.பி.டி.ஓ., 93450 00850.3. ஜோதி, ஏ.பி.டி.ஓ., 96291 77228.3வது மண்டலம்:1. பெரியசாமி, துணை தாசில்தார், 98651 60901.2. தீபா, ஏ.பி.டி.ஓ., 96009 135403. சுந்தரராஜ், ஏ.பி.டி.ஓ., 98657 441324வது மண்டலம்:1. பாரதிராஜா, ஏ.பி.டி.ஓ., 90800 43460.2. சாந்தி, ஏ.பி.டி.ஓ., 97916 80341.3. ஜீவா, ஏ.பி.டி.ஓ., 93848 44575.