மடத்துக்குளம்:
திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் கலந்துகொண்டு பேசுகையில், கட்டாய மத மாற்றத்தால் தற்கொலைகள் தொடர்கிறது.
எனவே குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் பப்பிஸ், வீரப்பன், சதீஷ் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.