கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

ஹஜ் பயணம் - தன்னார்வ தொண்டர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

உடுமலை:

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு இதர மாநிலங்கள் வாயிலாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா செல்லும் பயணிகளுக்கு உதவ ஹஜ் தன்னார்வ தொண்டர்களை, அனுப்புவது வழக்கம். இந்தாண்டு ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்ய சுற்றறிக்கை வெளியிடப்படுள்ளது. 

அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை விண்ணப்பித்து நாளை 23-ந் தேதிக்குள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படவும் உள்ளது.

பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில்:

ஹஜ் தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் வகையில் பள்ளிகளில் விபரம் தெரிவிக்கப்பட்டது. சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால் ‘இன்மை அறிக்கை’ அனுப்பப்படுகிறது என்றனர்.