கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை- 30-ந் தேதி நடக்கிறது

பொதுத்தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் மதியம் 2.30 மணிக்கு மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெறும்.

மாலை மலர்

திருப்பூர்:.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப் பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட் டத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை கடந்த மாதம் 20-ந் தேதி முதல் கடந்த 25-ந்தேதி வரை இணையதளம் மூலமாக 6 ஆயிரத்து 995 விண்ண ப்பங் கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண் ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் நாளை 30ந் தேதி குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையம் இல்லாத பள்ளிகளில் காலை 8.30 மணிக்கும், பொதுத்தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் மதியம் 2.30 மணிக்கும் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெறும்.

இணையதளத்தில் விண்ணப்பித்த விவரம் மற்றும் அனைத்து சான்றுகளை பெற்றோர் கொண்டு வந்து குலுக்கலில் பங்கேற்கலாம். ஆதரவற்றோர், எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் நேரடியாக சேர்க்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.