கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

சில பகுதிகளில் வனத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பாதிப்புகள் குறித்து ஆய்வும் செய்யப்பட்டது.

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம் நிவாரண குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

குடிமங்கலம்,

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில்  வனத்திலிருந்து வெகுதொலைவு தள்ளி அமைந்துள்ள விளைநிலங்களிலும் காட்டுப்பன்றிகளால், தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.விளைநிலங்களில் புதிதாக நடவு செய்த  தென்னங்கன்றுகளின், குருத்துகளை  அவை சேதப்படுத்துவதால்  புதிதாக நடவு செய்ய  அதிக செலவிட வேண்டியுள்ளது.

 சேதம் குறித்தும், நிவாரணத்துக்கான விண்ணப்பங்களையும், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில்  சமர்ப்பித்து வருகின்றனர்.

சில பகுதிகளில்  வனத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில்  பாதிப்புகள் குறித்து ஆய்வும் செய்யப்பட்டது. இது குறித்து குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கூறியதாவதுகாட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.

 காட்டுப்பன்றிகளை வனத்துக்குள் விரட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  சேதநிலையை கணக்கிட்டு  நிவாரணம் வழங்குவதில், அரசுத்துறைகளிடையே முரண்பாடு நிலவுகிறது.வேளாண்துறை சார்பில்  பாதிக்கப்பட்ட தென்னங்கன்றுகளுக்கு  தலா 10 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கபரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 ஆனால் வனத்துறையினர்  ஏக்கர் பரப்பில்  பாதித்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.எனவே  திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  நிவாரணத்தொகையை முறையாக நிர்ணயித்து  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.