கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

ஈரோடு-கோவை பாசஞ்சர் ரெயில் 1-ந்தேதி முதல் இயக்கம்

மறுமார்க்கமாக கோவையில் இருந்து மாலை 6:35மணிக்கு புறப்பட்டு இரவு, 7:45மணிக்கு திருப்பூரை கடக்கும்.

மாலை மலர்

திருப்பூர்:

ஈரோடு-கோவை பாசஞ்சர் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இதுகுறித்து  தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருகிற ஏப்ரல் 1-ந்தேதி காலை 7:15மணிக்கு ஈரோட்டில் புறப்படும் பாசஞ்சர் ரெயில் தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் ரோடு, இருகூர், பீளமேடு, கோவை வடக்கு  ரெயில் நிலையங்களில் நின்று 9:45 மணிக்கு கோவை சென்று சேரும்.மறுமார்க்கமாக கோவையில் இருந்து மாலை 6:35மணிக்கு புறப்பட்டு இரவு, 7:45மணிக்கு திருப்பூரை கடக்கும். இரவு 9:15க்கு ஈரோடு சென்று சேரும். 8 பெட்டிகளை கொண்டதாக இந்த ரெயில் இயங்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.