கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலையில் மின்னணு எந்திரம் பழுது

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரமாக காத்திருந்தனர்.

மாலை மலர்

உடுமலை:

உடுமலை நகராட்சி 33-வது வார்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கியது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொறியாளர்கள் அங்கு விரைந்து சென்று பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரமாக காத்திருந்தனர். 

இது குறித்து ஆணையாளர் சத்தியநாதன் கூறியதாவது: 

குறிப்பிட்ட அந்த வார்டில் பெல் நிறுவன பொறியாளர்களை வைத்து பழுதுகள் நீக்க முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சி பலன் அளிக்காததால் அந்த வார்டுக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.