குடிநீர் திட்டப்பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

முத்தூரில் குடிநீர் திட்டப்பணிகள் - அமைச்சர் தொடங்கி வைத்தார்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

திருப்பூர்:

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிபணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்று வருகிறார். 

இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஈரோடு சாலையில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.