கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்

குறைந்த வாக்கு வித்தியாசமாக 7-வது வார்டில் கனகமணி ( அ.தி.மு.க. 342 ) தன்னை எதிர்த்த சுயேச்சை வேட்பாளர் விஜயலட்சுமியை விட 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பல்லடம்:

பல்லடத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் பெற்ற வேட்பாளர் 16-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சே.ருக்குமணி. அவர் பெற்ற வாக்குகள் 1173. அவரை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணசாமி 502 வாக்குகள் பெற்றார். 671 வாக்குகள் அதிகம் பெற்று ருக்குமணி வெற்றி பெற்றுள்ளார்.

பல்லடம் நகராட்சியில் அதிக வாக்குகள் பெற்றது இவர்தான். அதேபோல குறைந்த வாக்கு வித்தியாசமாக 7-வது வார்டில் கனகமணி ( அ.தி.மு.க. 342 ) தன்னை எதிர்த்த சுயேச்சை வேட்பாளர் விஜயலட்சுமியை ( 286 ) விட 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT