வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயன்கோவில் என்ற இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தன்னார்வ அமைப்பினர். உடலை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் தெரியப்படுத்தினர். தகவல் அறிந்த முதியவரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்ராயன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்துள்ளார். முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.