வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வட்டமலை கரை ஓடை அணைப்பகுதியில் ஏராளமான மான்கள், பறவைகள் போன்ற விலங்கினங்கள் உள்ளன.
தற்போது அணைக்கு தண்ணீர் வந்ததால் பறவைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்கினங்கள் நீர்ப்பிடிப்பு பகுதியை விட்டு வறண்ட பகுதிக்கு வெளியே வந்து சுற்றி திரிகின்றன.
இதனால் சமூகவிரோதிகள் மான் மற்றும் பறவைகள் போன்றவற்றை வேட்டையாட வாய்ப்புள்ளது. ஆகையால் அவற்றை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.