கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா உதவி மையம் மீண்டும் திறப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வருகிறது. நேற்று முன்தினம் 68 பேர் பாதிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில்   நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம், 98,796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 97,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,027 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் 465 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கொரோனாவும் கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது உலகநாடுகளில் ஒமிக்ரான் பரவல் ஏற்பட தொடங்கியுள்ளது.

இந்தியாவிலும் இதனால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தடுப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா மற்றும் ஒமிக்ரானால் பாதிப்பவர்களை கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் கொரோனா உதவி மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை விவரம் மற்றும் ஆக்சிஜன் வசதி குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.