வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று 218 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 925 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.91.60க்கும், குறைந்தபட்சம் ரூ.74க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 86லட்சத்து 33ஆயிரத்து 449க்கு வணிகம் நடைபெற்றது.