திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் ஓட்டு செலுத்தும் வகையில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 4 நாட்களாக அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டு பதிவு செய்த கவர்களை போட்டுச் சென்றனர். இன்று மாலை 5 மணி வரை தபால் ஓட்டுகளை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே வாக்கு செலுத்தாத பணியாளர்கள் இன்று தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்த ஓட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நாளான நாளை முதலில் திறக்கப்பட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.