முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

நாடு முழுவதும் இன்று பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

மாலை மலர்

திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. 

இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், சுகாதார துறையினருக்கு 3-வது தவணை முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்று பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 9 மாத இடைவெளிக்கு பிறகு 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.