கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பனியன் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

அவினாசி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாலை மலர்

அவினாசி:

அவினாசியை அடுத்து நடுவச்சேரி பழனிசாமி காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் கோபால் ( வயது 42). பனியன் தொழிலாளியான இவர் நேற்று இரவு வீட்டின் மொட்டைமாடியில் இருந்து எச்சில் துப்பும் போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து அவரது மனைவி முனீஸ்வரி  கொடுத்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.