திருப்பூர்:
தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் 6ம் ஆண்டு துவக்க விழா, மே தின விழா மற்றும் திட்ட பொதுக்குழு ஆகியவை அவிநாசியில் நடந்தது. திருப்பூர் திட்ட கிளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் முருகானந்தம், வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலாளர் சுந்தரராஜன், அறிக்கை வாசித்தார்.
மாநில அரசு பென்ஷன்தாரர்களுக்கு 70 வயது பூர்த்தியானதும்10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, வட்ட செயலாளர் சுப்ரமணியம், சங்க செயற்குழு உறுப்பினர், திட்ட செயலாளர் சுப்பிரமணியம், சங்க பொது செயலாளர் ராமமூர்த்தி, மாநில தலைவர் சுடலை உள்ளிட்ட பலர் பேசினர். திட்ட துணை தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.