மின் மயான நடுரோட்டில் உள்ள ஆபத்தான பள்ளத்தை படத்தில் காணலாம்.  
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மின் மயான நடுரோட்டில் ஆபத்தான பள்ளம்

இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மின் மயானம் அருகே செல்லும் நடுரோட்டில் ஏற்பட்ட சிறிய குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் முன்னா ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் உள்ளிருக்கும் அனைத்து கேபிள்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிைலயில் காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.