விழாவில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் சோதனை நடத்தி அனுப்பி வைத்தனர். அதனை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன.

மாலை மலர்

திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  440 கவுன்சிலர்களில் 20 பேர் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்ட நிலையில்   420 கவுன்சிலர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவுன்சிலர்களும்  இன்று பதவியேற்று கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியில்    தி.மு.க., 23 வார்டுகள்,  இந்திய கம்யூனிஸ்டு 6, ம.தி.மு.க.,3, காங்கிரஸ்2,  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் என தி.மு.க. கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. 18 வார்டுகள், அந்த கூட்டணியில் இடம் பெற்ற த.மா.கா. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 2வார்டுகள்,  சுயேட்சைகள் 2 வார்டுகளிலும்  வெற்றி பெற்றனர். வெற்றி  பெற்ற  60கவுன்சிலர்களும் இன்று பதவியேற்றனர். 

பதவியேற்பு விழா திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்  நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர்  கிராந்திகுமார் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து  வைத்தார். கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றி  பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு கவுன்சிலருடன் 5 பேர்  மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மாமன்ற கூட்டத்தில்   கவுன்சிலருக்கு மட்டுமே  அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவர்கள் பதவியேற்பை காண மாநகராட்சி அலுவலக வளாகத்தில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு  இருந்தது. எல்.இ.டி., டி.வி.க்களும் அமைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில்  உடுமலை, தாராபுரம்,  காங்கேயம், வெள்ளகோவில், பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள்  உள்ளன. 6 நகராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட் பாளர்கள்  வெற்றி பெற்றனர்.

உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளின் கவுன்சிலர்கள், தாராபுரத்தில் 30 கவுன் சிலர்கள், காங்கேயம் நகராட்சியில் 18 கவுன்சிலர்கள், வெள்ளகோவில் நகராட்சியில் 21 கவுன்சிலர்கள், பல்லடம் நகராட்சியில் 18 கவுன்சிலர்கள், திருமுருகன் பூண்டி நகராட்சியில்  27 கவுன்சிலர்கள்  அந்தந்த நகராட்சி அலுவலகங்களில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்று  கொண்டனர். நகராட்சிஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

மாவட்டத்தில் கணியூர், கொமரலிங்கம், மடத்துக்குளம், சங்கராமநல்லூர்,  தளி, கன்னிவாடி,  மூலனூர், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், மூலனூர், ருத்ராவதி, அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, சாமளாபுரம் ஆகிய 15 பேரூராட்சிகள் உள்ளன.

இதில் ருத்ராவதி பேரூராட்சியை தவிர மற்ற  14 பேரூராட்சிகளையும் தி.மு.க.கூட்டணி கைப் பற்றியது. இதில் கணியூரில் 15 கவுன்சிலர்கள், கொமர லிங்கத்தில் 15 பேர், மடத்துக்குளத்தில் 18 பேர்,  சங்கராமநல்லூரில் 15 பேர், தளியில் 17 பேர்,  கன்னிவாடியில்  12 பேர், மூலனூரில்  15 பேர்,  சின்னக் காம்பாளையத்தில் 15 பேர், கொளத்துப்பாளையத்தில் 18 பேர், முத்தூரில் 15 பேர், ருத்ராவதியில் 15 பேர்  ,அவினாசியில் 18 பேர், குன்னத்தூரில் 15 பேர், ஊத்துக்குளியில் 15 பேர்,  சாமளாபுரத்தில் 15 பேர் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பதவியேற்றனர்.  பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள்  உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில்  சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பல்லடம் நகராட்சியில் நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விநாயகம் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.