திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, 6 நகராட்சி, 15 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் 60 வார்டுகள், நகராட்சிகளில் 147 வார்டுகள்.
பேரூராட்சிகளில் 233 வார்டுகள் என 440 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண்கள்,3 லட்சத்து 50 ஆயிரத்து 247 பெண்கள், 170 திருநங்கைகள் என 7.12 லட்சம் வாக்காளர் உள்ளனர். மொத்தம் 776 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
6 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 998 ஆண்கள். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 364 பெண்கள், 21 திருநங்கைகள் என 2 லட்சத்து 45 ஆயிரத்து 383 வாக்காளர் உள்ளனர். மொத்தம் 280 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
பேரூராட்சிகளில் மொத்தம் 84 ஆயிரத்து 827 ஆண்கள், 89 ஆயிரத்து 384 பெண்கள், 8 திருநங்கைகள் என ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 219 வாக்காளர் உள்ளனர். மொத்தம் 263 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 440 வார்டுகளில் 1,319 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5லட்சத்து 66 ஆயிரத்து 178 ஆண்கள், 5 லட்சத்து 65 ஆயிரத்து 995 பெண்கள், 199 திருநங்கைகள் என மொத்தம் 11 லட்சத்து 32 ஆயிரத்து 372 வாக்காளர் உள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், 3 ஓட்டுப்பதிவு அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1,319 ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதல் இருப்புடன் சேர்த்து 5,540 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.