விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகைக்கான காசோலையை நீதிபதிகள் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

லோக் அதாலத்தில் 2 பேருக்கு ரூ.1.15 கோடி விபத்து இழப்பீடு தொகை

பல்லடத்தை சேர்ந்த பிரபாகர் என்பவரும் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார்.

திருப்பூர்:

திருப்பூர் கோர்ட்டில் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. பல்லடத்தை சேர்ந்த ஆசிப்கான் கடந்த 2016ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பஸ் மோதியதில் பலத்த காயமடைந்து ஒரு காலை இழந்தார்.  

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சமரச தீர்வு காணப்பட்டது. அதன்படி ஆசிப்கானுக்கு ரூ. 60 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. 

இதேப்போல் பல்லடத்தை சேர்ந்த பிரபாகர் என்பவரும் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். அது தொடர்பான வழக்கில் இன்று சமரச தீர்வு காணப்பட்டு ரூ. 55 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. 

இழப்பீட்டிற்கான காசோலைகளை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுகந்தி வழங்கினார். விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி நாகராஜன் உள்பட நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். விபத்து வழக்குகளில் வக்கீல் பாலகுமார் வாதாடி இழப்பீடுகளை பெற்று கொடுத்துள்ளார்.