பல்லடம் :
பல்லடம் கடைவீதியான என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி வணிகவளாகம், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. எப்பொழுதும் வாகன போக்குவரத்து நிறைந்திருக்கும். இதில் கடைவீதி வழியாக சரக்கு வாகனங்களும் வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில்,என்.ஜி.ஆர்.ரோட்டில் அண்ணா சிலை அருகே, வாகன தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.