பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு திட்டம் மீண்டும் தொடக்கம்

அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மதிய உணவு வழங்கப்பட்டது.

வெள்ளகோவில் :

வீரசோழபுரம் ஊராட்சியில் உள்ள மோளாங்குட்டைபாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.

அதிகாரிகள் தற்போது மேற்கொண்ட முயற்சியால் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் மதிய உணவு வழங்க அனுமதி இல்லாத நிலையில் இருந்து வந்தது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று முதல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக சத்துணவு மேலாளர் ஜெயந்தி, வட்டார கல்வி அலுவலர் சிவகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் சியா ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT