கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

சேவூா் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவினாசி :

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி ஆம்பூதி பகுதியைச் சோ்ந்த அம்மாசை மகன் ராஜன் (வயது 50). இவா் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நீலிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, புளியம்பட்டியில் இருந்து அன்னூா் நோக்கி சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SCROLL FOR NEXT