கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

மாதாந்திர உதவித்தொகை வழங்க பூசாரிகள் வலியுறுத்தல்

இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

உடுமலை :

உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.

மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

SCROLL FOR NEXT