பால் உற்பத்தியாளர்களுக்கு காசோலை வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை

வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்தில் செயல்படும் வடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஈட்டிய நடப்பாண்டு லாபத்தொகை யிலிருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (பால்வளம்) இரா.கணேஷ், ஆவின் பொது மேலாளர் ஆர்.சதீஸ் மற்றும் ஆவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT