கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

குண்டடம் மருத்துவ முகாம் மூலனூருக்கு இடமாற்றம்

ஜூன் 24ந் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டடம் :

திருப்பூா் மாவட்டம் குண்டடத்தில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் மூலனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :- தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 24ந் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கயம் காா்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றாக பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மருத்துவ முகாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT