கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவிலில் 16 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செயஙயபட உள்ளது.செவ்வாய்க்கிழமையன்று மாலை கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

மாலை மலர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் புதிய பஸ் நிலையம், திருவள்ளுவர் நகர், கல்லாங்காடுவலசு, குமாரவலசு, லைப்ரரி, உப்பு பாளையம், புதுக்காடு, சிவநாதபுரம், ஏபி புதூர், சீரங்க ராய கவுண்டன் வலசு, ஓலப்பாளையம் அருகே உள்ள அனுமந்தபுரம், முத்தூர், எல் கே சி நகர் தண்ணீர் டேங், நடேசன் நகர், பழனிசாமி நகர், மணியக்காரன் பேட்டை, ஆகிய 16இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

பிறகு செவ்வாய்க்கிழமையன்று மாலை வீரகுமாரசாமி திருக்கோவில் வளாகத்திலிருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடுமுடி ஆற்றில் கொண்டு சென்று கரைக்க போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.