கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

கொப்பரை விற்பனை செய்த விவசாயிகளுக்கு 4 மாதங்களாக பணம் வழங்காததால் அவதி

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது.14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை

திருப்பூர்

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் உடுமலை கோட்டாட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது. விவசாயிகளுக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் காசோலை வழங்கப்பட வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு தாமதமாக காசோலை வழங்கப்படுகிறது.

தற்போது கடந்த மே 29-ந் தேதி கொப்பரை வழங்கிய 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக காசோலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.