கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பாலியஸ்டர் நூல் மீதான தரக்கட்டுப்பாட்டு உத்தரவு காலநீட்டிப்பு - மத்திய அரசுக்கு சைமா நன்றி

தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அளவை வரும் ஜூலை 2 வரை நீட்டித்துள்ளது. உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஆகியோருக்கு சைமா சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

திருப்பூர்:

பாலியஸ்டர் நூல் வகைகளின் மீதான தரக்கட்டுப்பாட்டு உத்தரவை காலநீட்டிப்பு செய்ததற்கு சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்) நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து சைமா தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் பல வகையான பாலியஸ்டர் நுாலை இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டில் விற்பனை செய்யவும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அளவை வரும் ஜூலை 2 வரை நீட்டித்துள்ளது.

தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அவகாசத்தை நீட்டித்ததற்கு மத்திய அரசுக்கும் ரசாயனம் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஆகியோருக்கு சைமா சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT