உள்ளூர் செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து - அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. சார்பில் சென்னிமலை பேரூராட்சியில் தியாகி குமரன் பேருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு,மின்கட்டண உயர்வு,பால் விலை உயர்வு, அதிமுக. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நல திட்டப்பணிகளை கிடப்பில் போட்டது ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னிமலை பேரூராட்சியில் தியாகி குமரன் பேருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் , சென்னிமலை பேரூராட்சி செயலாளர் ரமேஷ் ,மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT