கலெக்டர் வினீத் வங்கி கடன் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சிவன்மலையில் சுய உதவிக்குழுவிற்கு கலெக்டர் நிதியுதவி

மாவட்ட கலெக்டர் வினீத் 3 குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.11 லட்சம் வழங்கினார்.14 புதிய குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.56. லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்ப்ட்டது.

காங்கேயம் :

காங்கேயம் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவிக்குழுவிற்கு தர மதிப்பீடு செய்தலும் புதிய மகளிர் குழு அமைத்தல் நிகழ்ச்சியும் சிவன்மலையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டு 3 குழுக்களுக்கு வங்கி கடன் ரூ 11 லட்சம் வழங்கினார். 14 புதிய குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு ரூ 56. லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்ப்ட்டது. புதிய குழு தொடங்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதில் ஊரக வாழ்வாதர இயக்க உதவித்திட்ட அலுவலர் ஜோசப், ரெத்தினராஜ், யூனியன் சேர்மன் மகேஸ் குமார், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, கனரா வங்கியின் பொதுமேலாளர், மற்றும் வட்டார அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் காங்கேயம் சுய உதவிக்குழு வட்டார மேலாளர் சந்தா நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT