கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

முத்தூரில் மளிகை கடை கூரையை பிரித்து பணம்- நகை திருட்டு

20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி.மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்டம், முத்தூர், முத்துமங்கலம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி (வயது57) . இவர் வழக்கம் போல் நேற்று 16ந் தேதி தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று சனிக்கிழமை காலை வந்து பார்க்கும்போது கடையின் மேல் உள்ள சிமெண்ட் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரொக்கம் ரூ. 5 ஆயிரம் மற்றும் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது முத்தூர் -வெள்ளகோவில்-காங்கயம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகனத் தணிக்கையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT