பல்லடம் :
கோவை தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு வேன் ஒன்று பல்லடம்- செட்டிப்பாளையம் ரோட்டில் மேற்கில் இருந்து கிழக்காக வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சரக்கு வேனின் பின்புறம் மோதியது. இதில் சரக்கு வேனும் காரும் பறந்து சென்று ரோட்டை விட்டு அருகே உள்ள காலி இடத்தில் விழுந்தன. இதில் சரக்கு வேன் ஓட்டுநர் கோகுல், உதவியாளர் ரமேஷ், மற்றும் காரில் வந்த சுஜித்,பரமேஸ்வரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.