தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா கட்சியினர். 
உள்ளூர் செய்திகள்

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷாதேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார். மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உடுமலை :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லக்‌ஷா தேவி பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து பட்டம் பெற்றார்.

இதையடுத்து திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மங்களம் ரவி உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சிவசங்கர், துணை தலைவர் குப்புசாமி, பொருளாளர் அய்யப்பசாமி, நிர்வாகிகள் கண்ணப்பன், ரஜினி பிரசாந்த், சித்தார்த்தன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.