பல்லடம் :
பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் வழங்கியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் மிருதுளா நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் கெளசல்யாதேவி வேலுசாமி வரவேற்றார்.
இலச்சினையை ஆனைகட்டி ஆதி கூட்டமைப்பு சுமதி வெளியிட அதனை சூழலியல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம் பெற்றுக்கொண்டார். உடல் உறுப்பு தானம் வழங்கியோருக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முருகேசன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.