பொதுக்கூட்டத்தில் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் அ.ம.மு.க., சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.

தாராபுரம்:

திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அமமுக., துணைச் செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான சி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி, அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம். ஆர்.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட அமமுக., செயலாளர் கே.பி. நல்லசாமி பேசுகையில்;- அதிமுக., முன்னாள் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.  

SCROLL FOR NEXT