விழாவில் கலந்து கொண்டவர்களின் காட்சி. 
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர்:

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், கருணாகரன், ஹரிஹரசுதன், பட்டுலிங்கம், எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி ஈஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி மற்றும் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT