காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் இட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும்.

திருப்பூர் :

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம், மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உள்ளூர் இட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் காய்கறி, உணவு பொருள்களின் செலவீனங்களை ஏற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT