கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

காரில் மதுபான பாட்டில்கள் கடத்தியவர் கைது

மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டனர்.

அந்த காரில் வந்த சூலூர் வதம்பச்சேரி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அனுமதி இன்றி மதுபான பாட்டில்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.