உள்ளூர் செய்திகள்

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

ரோந்து பணியில் சிக்கினார் போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பால்னாங்குப்பம் அருகே அரசு மது பாட்டிலை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

பால்னாங்குப்பம் பெருமாள் வட்டத்தை சேர்ந்த புகழேந்தி மனைவி பிரியா (வயது 34) தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.