உள்ளூர் செய்திகள்

போதை பொருள் விற்பனை செய்தவர் கைது

ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் உமராபாத் ஊராட்சி பஸ் நிலையத்தில் ரியாஸ் (வயது 45) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் உமராபாத் போலீசார் கடையில் சோதனை செய்தபோது ஹான்ஸ், குட்கா பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT