உள்ளூர் செய்திகள்

தண்டுமாரியம்மன், எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டதுபக்தர்கள் சாமி தரிசனம்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை சிறப்பாக அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.