உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது

கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத் தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பேபி (வயது 65), இவர்களுடைய 2-வது மகன் செல்வராஜ் (39). இவர் தனது தாயிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

சொத்தை பிரித்து கொடுக்காததால் தனது தாய் பேபியை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து பேபி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT