உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினர்.

மாணவி கிடைக்காததால் பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.