உள்ளூர் செய்திகள்

மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

தீயணைப்பு படை வீரர்கள் பிணத்தை மீட்டனர்போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அருகே கொடும்பம்பள்ளி சாமு கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தருமன் இவரது மனைவி இந்திரா (வயது 55). தருமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மேலும் இவரது மகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இந்திரா தனது மருமகளுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியனகுப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இந்திரா கடந்த 28-ந்தேதி தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் வீட்டில் அவரை தேடி வந்தனர். குடியானகுப்பம் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை இந்திரா பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் கயிறு கட்டல் கட்டி இறக்கி பிணத்தை மீட்டனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT