ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை செய்தது. இதில் ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை சுட்டெரிக்கும் வெயிலால் புழுக்கத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும் கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் அனல் காற்று வீசிய நிலையில் கன மழை பெய்ததால் பூமியின் சூடு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று சுமார் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனர் நாளை முதல் பிளஸ்-2 மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுதுபவர்களுக்கு படிக்க வசதியாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் மின்சார வாரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.